தமிழகம்

இலவச ரேஷன் பொருட்கள் வழங்க ரூ.257 கோடி நிதி ஒதுக்கீடு

செய்திப்பிரிவு

தமிழகத்தில் குடும்ப அட்டைகளுக்கு ஜூலை மாதம் இலவச அரிசி உள்ளிட்ட பொது விநியோகத் திட்ட பொருட்களை வழங்கரூ.256 கோடியே 91 லட்சத்து 13ஆயிரத்து 420 நிதி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 6-ம் கட்டமாகஜூலை 31 வரை ஊரடங்குநீட்டிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக வாழ்வாதாரத்தை இழந்துள்ள மக்களுக்கு இலவசஅரிசி, சர்க்கரை, பருப்பு, பாமாயில் ஆகியவை ஜூலை மாதத்துக்கும் வழங்கப்பட உள்ளது.

இந்த பொருட்களைப் பெறஇன்றுமுதல் 9-ம் தேதிவரை குடும்ப அட்டைதாரர்களின் வீடுகளுக்கே வந்து டோக்கன் வழங்கப்படுகிறது.

இதன்படி, குடும்ப அட்டைதாரர்களுக்கு வழக்கமாக வழங்கப்படும் இலவச அரிசி, குடும்பஉறுப்பினர்கள் அடிப்படையில் வழங்கப்படும் சர்க்கரை ஆகியவற்றுடன் ஒரு கிலோ பருப்பு, ஒரு லிட்டர் பாமாயில் ஆகியவை வழங்கப்பட உள்ளன. இதற்காகரூ.256 கோடியே 91 லட்சத்து 13 ஆயிரத்து 420 ஒதுக்கும்படி உணவுப் பொருள் வழங்கல் ஆணையர் அரசுக்கு பரிந்துரைத்தார். இதை ஏற்ற தமிழக அரசு, அதற்கான நிதியை ஒதுக்கி அரசாணை வெளியிட்டுள்ளது.

SCROLL FOR NEXT