மத்திய ரயில்வே துறை அமைச்சருக்கு தெற்கு ரயில்வே ஆலோசனைக்குழு முன்னாள் உறுப்பினர் கே.என்.பாஷா அனுப்பிய மனுவில் கூறியது:
தமிழகத்தில் 24 ரயில்களை தனியார்மயமாக்க ரயில்வே துறை முடிவு செய்தது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், தனியாரிடம் ரயில் சேவையை ஒப்படைக்க முதல் கட்ட நடவடிக்கையை ரயில்வே அமைச்சகம் தொடங்கி உள்ளது. ரயில்களை இயக்கும் பொறுப்பை தனியாரிடம் ஒப்படைத்தால், அதிக ரயில் கட்டணம் வசூலிப்பார்கள். பயணிகள் டிக்கெட்டுகளை இருமடங்கு விலை கொடுத்து வாங்க வேண்டி வரும்.
வருமானம் கிடைக்கும் நிர்வாகத்தை ஏன் தனியாரிடம் ஒப்படைக்க ரயில்வே நிர்வாகம் துடிக்கிறது என்று தெரியவில்லை. மத்திய அரசு இந்த முடிவை மறுபரிசீலினை செய்து ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும், எனத் தெரிவித்துள்ளார்.