தமிழகம்

சித்தாலப்பாக்கத்தில் உயர் நீதிமன்ற உத்தரவை மீறி ஏரியில் குப்பை கொட்டும் ஊராட்சி நிர்வாகம்

செய்திப்பிரிவு

செங்கல்பட்டு மாவட்டம், பரங்கிமலை ஊராட்சிஒன்றியம், சித்தாலப்பாக்கம் ஊராட்சியில் தினமும் சேகரமாகும் 10 டன் குப்பை சித்தாலப்பாக்கம் பெரிய ஏரியில் கொட்டப்படுகிறது. இதனால்,நிலத்தடி நீர் கடுமையாக மாசடைகிறது. ஏரியில்குப்பை கொட்டுவதை ஊராட்சி நிர்வாகம்நிறுத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தும், தொடர்ந்து குப்பை கொட்டப்படுகிறது.

இந்நிலையில் ஏரியில் குப்பை கொட்ட உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதையடுத்து பொதுப்பணித் துறை சார்பில் அறிவுறுத்தியும் தொடர்ந்து குப்பை கொட்டப்படுகிறது. சுகாதாரத்தை பாதுகாக்க வேண்டிய ஊராட்சி நிர்வாகமே இதுபோல் செய்துவருவதால், மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்துகின்றனர்.

இதுகுறித்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள சுற்றுச்சூழல் ஆராய்ச்சியாளர் கே. முத்துக்குமரன், "நீதிமன்றம் குப்பை கொட்ட தடை விதித்தும், ஊராட்சி நிர்வாகம் நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் தொடர்ந்து குப்பையை கொட்டி வருகிறது. இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும்போது ஆதாரத்துடன் தெரிவிப்போம்" என்று தெரிவித்தார்.

SCROLL FOR NEXT