காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா வெளியிட்ட அறிக்கை: காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த மார்ச் 24-ம் தேதி முதல்நடைமுறையில் உள்ள ஊரடங்கு தற்போது சில தளர்வுகளுடன் நீடித்து வருகிறது. இந்த ஊரடங்குஜூலை 31-ம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த ஊரடங்கு காலத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமைகளான ஜூலை 5, 12, 19, 26 ஆகிய நாட்களில்எந்தவித தளர்வும் இல்லாமல் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.
அதன்படி இன்று (ஜூலை 5) எந்த தளர்வும் இல்லாமல் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும். இந்த நாட்களில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ளஅனைத்து ஊராட்சிகள், பேரூராட்சிகள், மற்றும் நகராட்சிகளில்உள்ள அனைத்து கடைகளும்அடைக்கப்பட வேண்டும். இதற்குஅனைத்து வியாபாரிகள் மற்றும்பொதுமக்கள் முழு ஒத்துழைப்புஅளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.