கோப்புப் படம் 
தமிழகம்

செங்கை மாவட்ட காவல் துறை சார்பில் கரோனா விழிப்புணர்வு பணிக்கு 160 குழுக்கள்

செய்திப்பிரிவு

செங்கல்பட்டு காவல் மாவட்டத்தில்கரோனா தடுப்பு விழிப்புணர்வுக்காக, 160 குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

செங்கல்பட்டு மாவட்டத்தில் கரோனா பரவலைத் தடுக்க மாவட்டநிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது இதற்காக மாவட்டத்தில் 160 விழிப்புணர்வு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு குழுவிலும் தலா ஒரு காவலர், போலீஸ் நண்பர்கள் குழு உறுப்பினர், தன்னார்வலர், பகுதி முக்கியப் பிரமுகர், வியாபார பிரதிநிதி என மொத்தம் 5 பேர் இடம் பெற்றிருப்பர். இவர்கள் காவல் நிலையஎல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை மக்களிடம் வழங்கி, தொற்றிலிருந்து தம்மையும் தம் குடும்பத்தாரையும் எவ்வாறு காத்துக்கொள்வது என்ற விவரத்தை தெரிவிப்பர்.

மேலும் பொதுமக்களுக்கு எதிராக போலீஸார் தவறு செய்தால், 99402 77199 என்ற எண்ணுக்கு நேரடியாக தகவல் தெரிவிக்கலாம் என செங்கல்பட்டு எஸ்பி கண்ணன்தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT