சேலத்தில் ஒரு வாக்குச்சாவடியில் நாளை 10-ம் தேதி மறுவாக்குப்பதிவு நடத்தக்கூடாது என்று தேமுதிக சார்பில் ஆட்சியர் ஹனிஸ் ஷாப்ரா விடம் மனு அளிக்கப்பட்டது.
சேலம் நாடாளுமன்றத் தொகுதிக் குட்பட்ட சேலம் மாநகராட்சி 10-வது வார்டில் உள்ள 213-வது வாக்குச்சாவடி மையத்தில் கடந்த 24ம் தேதி நடந்த வாக்குப்பதிவின்போது வாக்குப்பதிவு இயந்திரம் பழுதானது. இந்நிலையில் வாக்குப்பதிவு இயந் திரம் கோளாறு குறித்து இந்திய தேர்தல் ஆணையத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதனை யடுத்து, இந்திய தேர்தல் ஆணையம் 213-வது வாக்குச்சாவடி மையத்திற்கு மே 8-ம் தேதி மறுதேர்தல் நடத்த உத்தரவிட்டது. கால அவகாசம் குறைவாக இருப்பதாக அனைத்து கட்சியினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து மறுதேர்தல் 10-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. அதன்படி நாளை வாக்குப்பதிவு நடக்கிறது.
இந்நிலையில் தமிழக சட்டப் பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவரான தேமுதிகவைச் சேர்ந்த அழகாபுரம் மோகன்ராஜ் சேலம் மாவட்ட ஆட்சி யர் ஹனிஸ் ஷாப்ராவிடம் வியாழக் கிழமை கோரிக்கை மனு அளித்தார். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்ப தாவது: சேலம் தொகுதியில் மாநக ராட்சிப் பகுதியிலுள்ள 213-வது வாக்குச்சாவடி மையத்தில் 10-ம் தேதி மறுவாக்குப்பதிவு நடத்து வதாக தேர்தல் ஆணையம் அறிவித் துள்ளது. அங்கு மறு வாக்குப் பதிவு நடத்தக்கூடாது. வாக்கு எண்ணிக்கையின்போது, முகவர்கள் போர்வையில் சமூகவிரோதிகள் புகுந்து தகராறில் ஈடுபட திட்ட மிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள் ளது. எனவே, வாக்கு எண்ணிக்கை மையத்தில் மத்திய தொழில் பாது காப்பு படையினர், ரிசர்வ் போலீஸார் பலத்த பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்த வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள் ளது. இந்த மனுவை பெற்றுக்கொண்ட ஆட்சியர் ஹனிஸ் ஷாப்ரா, இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
தேர்தல் ஆணையத்துக்கு கண்டனம்
தேமுதிக எம்.எல்.ஏ. மோகன் ராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழக முதல்வர் தலைமை தேர் தல் ஆணையத்துக்கு எழுதிய கடிதத் தில், 48 மணி நேரத்திற்கு குறைவான அவகாசத்தில் மறுவாக்குப்பதிவு நடத்த மேற்கொண்டுள்ள நடவடிக்கை தேவையற்றதாக தெரிகிறது என்று கூறியிருந்தார்.
உடனடியாக தமிழக தேர்தல் ஆணையாளர் பிரவீண் குமார், மறுவாக்குப்பதிவு நடப்பதை ஒத்திவைத்து உத்தரவிட்டார். இதன் மூலம் தேர்தல் ஆணையர் தேர்தல் அதிகாரியாக செயல்படுகிறாரா அல்லது அதிமுக-விற்கு ஆதர வாக செயல்படுகிறாரா எனத் தெரிய வில்லை என்றார்.