தமிழகத்தில் பிரண்ட்ஸ் ஆப் போலீஸை தடை செய்ய வலியுறுத்தி கோவில்பட்டியில் ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
சாத்தான்குளம் படுகொலையில் குற்றவாளி காவலர்களுக்கு உடனடியாக தண்டனை வழங்க வேண்டும். தமிழகத்தில் பிரண்ட்ஸ் ஆப் போலீஸை தடை செய்ய வேண்டும். பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும்.
கரோனா காலம் முடியும் வரை மின் கட்டணம் வசூலிக்க தடை விதிக்க வேண்டும். மின்சார திருத்தச் சட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும். நுண் நிதி நிறுவனங்கள் இ.எம்.ஐ. உள்ளிட்ட கடன் தொகையை வசூலிக்கக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவில்பட்டியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஜனநாயக வாலிபர் சங்க நகரச்செயலாளர் ஜெய்லானி கனி தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் எம்.உமாசங்கர், மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.தினேஷ் குமார், நிர்வாகிகள் மாரிச்செல்வம், கருத்தப்பாண்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் முழங்கினர்.