தமிழகம்

உயிர்நீத்த 20 வீரர்களின் குடும்பத்தினருக்கு காப்பீடு தொகை உடனே விநியோகம்: யுனைடெட் இந்தியா பெருமிதம்

செய்திப்பிரிவு

லடாக் எல்லையில் உயிர்நீத்த 20 வீரர்களின் குடும்பத்தினருக்கும் காப்பீட்டு பயன்களை உடனே வழங்கியுள்ளதாக யுனைடெட் இந்தியா தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி: லடாக் எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்
கில் கடந்த ஜூன் 15-ம் தேதி நடந்தமோதலில் இந்திய வீரர்கள் 20 பேர்வீரமரணம் அடைந்தனர். அவர்களதுதியாகத்தை யுனைடெட் இந்தியா காப்பீடு நிறுவனம் போற்றுகிறது.’

ஸ்டேட் வங்கியில் சம்பளக்கணக்கு வைத்துள்ள ராணுவ வீரர்கள், வங்கி மூலமாக யுனைடெட் இந்தியா நிறுவனத்தில் விபத்துக்கான
குழு காப்புறுதி பெற்றுள்ளனர். அவர்கள் வீரமரணம் அடைந்ததை தொடர்ந்து, ராணுவத்திடம் இருந்து ஸ்டேட் வங்கி வாயிலாக உரிய ஆவணங்கள் எங்களிடம் சமர்ப்பிக்கப்பட்டன. உடனடியாக அன்றைய தினமே 20 வீரர்களின் குடும்பத்தினரிடமும் காப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டது.

ஆயுள் காப்பீடு தவிர்த்த பிற காப்பீடு வகைகளில் சந்தை மற்றும் பிரீமியம் அளவில் நாட்டிலேயே 2-வது இடத்தில் யுனைடெட் இந்தியா உள்ளது. பணியின்போது உயிர்த் தியாகம் செய்யும் ராணுவம், துணை ராணுவத்தினருக்கான காப்பீட்டு பயன்களை யுனைடெட் இந்தியா உடனுக்குடன் வழங்கி வருகிறது.

SCROLL FOR NEXT