கரோனாவில் இருந்து குணமடைவோர் பட்டியலில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடத்தில் இருப்பதாக அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார்.
திருமங்கலம் தொகுதியிலுள்ள கப்பலூர்பகுதியில் தொழிலாளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கு அரிசி, காய்கறித் தொகுப்பு, கபசுரகுடிநீர் ,நோய் எதிர்ப்பு சக்திமாத்திரைகளை ஜெயலலிதா பேரவை சார்பில், அமைச்சர் ஆர்பி. உதயகுமார் இன்று வழங்கினார்.
பின்னர் அமைச்சர் செய்தியாளர்களிடம் பேசியது:
கடந்த 100 நாட்களுக்கு மேலாககரோனாவால் உலகம் முழுவதும் ஒருகோடியே 10 லட்சம்மக்கள் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இந்நோய் தொற்றை தடுக்க, ஜனவரி முதலே முதல்வர் நடவடிக்கை மேற்கொண்டார்.
மக்களுக்கு பல்வேறு விழிப்புணர்வு அறிவுரைகளை வழங்கினார்.தடுப்பு பணிக்காக மருத்துவர்கள்,மருத்துவம் சார்ந்த பணிகளுக்கு தற்போது, 14, 814 பேரை முதல்வர் நியமித்துள்ளார்.
மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடகா மாநிலங்களை ஒப்பிட்டால் தமிழகத்தில் அதிகமானோருக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா, டில்லி, குஜராத் ஆகிய மாநிலங்களைஒப்பிடும்போது, தமிழகத்தில் இறப்பு சதவீதம்மிக குறைவு. இங்கு தான் 57 சதவீதம் பேர் குணமடைந்து, இந்தியாவிலே குணமானவர்களின் பட்டியலில் தமிழகம்முதலிடத்தில் உள்ளது. தற்போது கூட 90 வயதுமுதியவரை காப்பாற்றி உள்ளோம். மக்கள்யாரும் அச்சப்படவேண்டாம்.
இந்தியஅளவில் இருக்கும்மருத்துவர் கள் முதலர்வரின் தடுப்பு நடவடிக்கையை பாராட்டியுள்ளனர். முதல்வரின் வழிகாட்டுதல்படி அமைச்சர்கள், அதிகாரிகள் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். நிச்சயம் தமிழகம் கரோனா தொற்று இல்லாத மாநிலமாக உருவாகும். எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அரசியல் லாபத்திற்காக பொய்யான அறிக்கைகளை வெளியிடுகிறார். முதல்வரின் செயல்பாடு, அரசின் நடவடிக்கை பற்றி மக்களுக்கு நன்கு தெரியும்.
மத்திய அமைச்சர் நிதின்கட்காரி தற்போதைய பொருளாதாரசூழலில் உலகிலுள்ள நாடுகள் இந்தியாவிற்கு தொழில் முதலீடு செய்ய வேண்டும் என, கூறியுள்ளார்.
நமது முதல்வர் இந்த நேரத்திலும் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியை உயர்த்தும் வகையில், அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளிலுள்ள தொழில் நிறுவனங்களுடன் ரூ.15,128 கோடிக்கான தொழில் முதலீட்டை தமிழகத்தில் ஈர்த்துள்ளார். இதன்மூலம் 40 ஆயிரம் பேருக்குவேலை வாய்ப்பு கிடைக்கும்.