தமிழகத்தில், 10 ஆயிரம் சிறு கோயில்களுக்கு ரூ.2.50 கோடியில் பூஜை பொருட்களை முதல்வர் ஜெயலலிதா வழங்கினார். மேலும் 206 கோயில்களில் அன்னதான திட்டத்தையும் தொடங்கி வைத்தார்.
இது தொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
இந்து சமய அறநிலையத் துறைக்கு உட்பட்ட கோயில்களில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் திட்டத்தை கடந்த 2002 மார்ச் 23-ம் தேதி சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயி லில் முதல்வர் ஜெயலலிதா தொடங்கிவைத்தார். தமிழகம் முழுவதும் தற்போது 518 கோயில் களின் அன்னதான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்மூலம் தினமும் 47 ஆயிரத்து 809 பக்தர்களுக்கு உணவு வழங்கப்படுகிறது.
பக்தர்கள் மத்தியில் இந்தத் திட்டத்துக்கு பெரும் வரவேற்பு இருப்பதால் மேலும் 206 கோயில் களுக்கு அன்னதான திட்டம் விரிவுபடுத்தப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். அதன்படி, தலைமைச் செயலகத் தில் கடந்த 15-ம் தேதி நடை பெற்ற நிகழ்ச்சியில் அன்னதான திட்டத்தை அவர் தொடங்கி வைத்தார். அதன்படி, ஒரு கோயிலுக்கு 50 பக்தர்கள் வீதம் தினமும் 10 ஆயிரத்து 300 பக்தர்களுக்கு உணவு வழங்கப்படும்.
பூஜை பொருட்கள்
கிராமங்களில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வாழும் பகுதிகளில் அமைந்துள்ள 10 ஆயிரம் சிறு கோயில்களுக்கு ரூ.2.50 கோடியில் பூஜை பொருள்கள் வழங்கப்படும் என சட்டப்பேரவையில் கடந்த ஆண்டில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். அதன்படி, ஒரு கோயிலுக்கு ரூ.2,440 மதிப்பில் பித்தளை தாம்பாளம், தூபக்கால், மணி, கார்த்திகை விளக்கு, தொங்கு விளக்கு ஆகிய 5 பூஜை பொருட்கள் வீதம் 10 ஆயிரம் கோயில்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன் அடையாளமாக 5 கோயில்களுக்கு இந்தப் பொருள்களை முதல்வர் வழங்கினார்.
திருக்கோயில் அன்னதான திட்டத்தில் தினக்கூலி மற்றும் தொகுப்பூதியத்தில் பணியாற்றி வரும் 820 ஊழியர்களுக்கு பணிவரன்முறை செய்யப்பட்டு காலமுறை ஊதியம் வழங்கு வதற்கான ஆணையையும் முதல்வர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ், சுற்றுலாத் துறை அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி, தலைமைச் செயலாளர் கு.ஞானதேசிகன், தமிழக அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், இந்து சமய அறநிலையத் துறை செயலாளர் ரா.கண்ணன், ஆணையர் மா.வீர சண்முகமணி, கலை, பண் பாட்டுத் துறை ஆணையர் தா.கார்த்திகேயன், சுற்றுலாத் துறை ஆணையர் ஹர்சகாய் மீனா ஆகியோர் பங்கேற்றனர்.
இவ்வாறு அரசு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.