மேற்குத் தொர்ச்சி மலை பகுதியில் நக்சல்கள் ஊடுருவியதாக வந்த தகவலையடுத்து மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் நக்சல் தடுப்புப் பிரிவு போலீஸார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே அமைந்துள்ள மேற்குத் தொடர்ச்சி மலை அடர்ந்த வனப்பகுதி. இங்கு யானை, மான், மிளா, காட்டெருமை, சிறுத்தை உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள் வசித்து வருகின்றன.
குறிப்பாக மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள பட்டுப்பூச்சி, தாணிப்பாறை, மாவூத்து உள்ளிட்ட பகுதிகள் கேரளா எல்லையில் அமைந்துள்ளன.
தற்போது 3 மாதங்களாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் மக்கள் நடமாட்டம் இல்லாமல் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலை பகுதியில் நக்சல்கள் ஊடுருவல் உள்ளதாக தகவல்கள் பரவியது.
அதையடுத்து, நெல்லை மாவட்ட நக்சல் தடுப்பு சிறப்புப் பிரிவைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட போலீஸார் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் துப்பாக்கியுடன் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், ஒரு மாதம் வரை வனப்பகுதியில் இந்த ரோந்துப் பணி மேற்கொள்ளப்பட உள்ளதாக நெக்சல் தடுப்புப் பிரிவு போலீஸார் தெரிவித்தனர்.
மேலும், மலை அடிவாரப் பகுதியில் சந்தேகப்படும்படியாக சுற்றித்திரியும் நபர்களிடமும் தீவிர விசாரணை நடத்தி அவர்களின் தொடர்பு எண்ணையும் சேகரித்து வருகின்றனர்.