சாத்தான்குளத்தில் ஜெயராஜ் குடும்பத்தினருக்கு அதிமுக சார்பில் ரூ. 25 லட்சம் நிதியுதவியை வழங்கினார் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ. 
தமிழகம்

சாத்தான்குளம் வியாபாரிகள் குடும்பத்துக்கு அதிமுக சார்பில் ரூ.25 லட்சம் நிதி உதவி: அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ வழங்கினார்

செய்திப்பிரிவு

தூத்துக்குடிசாத்தான்குளத்தில் ஜெயராஜ் குடும்பத்தினருக்கு அதிமுக சார்பில் ரூ. 25 லட்சம் நிதியுதவியை வழங்கினார் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ.

சாத்தான்குளத்தில் போலீஸார் தாக்கியதால் உயிரிழந்ததாகக் கூறப்படும் ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்துக்கு, அதிமுக சார்பில் ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என, அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரான துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப் பாளரான முதல்வர் கே.பழனிசாமி ஆகியோர் அறிவித்தனர்.

இதன்படி, தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக செயலாளருமான கடம்பூர் செ.ராஜூ, அதிமுக சார்பில் ரூ.25 லட்சத்துக்கான காசோலையை ஜெயராஜின் மனைவி செல்வராணியிடம் நேற்று வழங்கினார். அதிமுக தெற்கு மாவட்டச் செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் எம்எல்ஏ உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

SCROLL FOR NEXT