பருவமழை காலத்தில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார்.
தமிழ்நாடு மின்னாளுமை முகமை அலுவலகத்தில் சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் நிர்வாகிகளுடன் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் காணொலி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார்.
இதைத் தொடர்ந்து, சென்னையில் வரும் காலங்களில் அதிகமழை பொழியும் என சென்னை ஐஐடி தெரிவித்து உள்ளது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் உதயகுமார் பதிலளிக்கையில், ‘‘வடகிழக்கு பருவமழை பெய்யும் அக்டோபர், நவம்பர், டிசம்பரில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து மாவட்ட நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தி, பாதிக்கப்படும் இடங்
களை கண்டறிந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பேரிடர் காலத்துக்கு முன்பு, பேரிடர் காலம், அதற்கு பிறகு என 3 காலங்களிலும் செய்ய வேண்டிய பணிகள் குறித்து கடலோர மாவட்டங்கள் உட்பட அனைத்து மாவட்ட நிர்வாகங்க ளுக்கும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது’’ என்றார்.