காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி.சாமுண்டீஸ்வரி காஞ்சிபுரம் சரக டி.ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்றுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இவர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பொறுப்பேற்றார். காஞ்சிபுரத்தை அச்சுறுத்தி வந்த ரவுடிகளை கைது செய்வதில் தீவிரம் காட்டினார். பலரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தார். மாணவர்கள் ரவுடிகளுடன் சேருவதை தடுக்க அவர்களுக்கான குழுவை உருவாக்கினார்.
போலீஸ் நண்பர்கள் குழுவை பலப்படுத்தினார். மிகக் குறுகிய காலம் பணியாற்றினாலும் காஞ்சிபுரம் மாவட்ட மக்களின் பாராட்டைப் பெற்றார். இவர் தற்போது காஞ்சி, செங்கை, திருவள்ளூர் மாவட்டங்களை உள்ளடக்கிய காஞ்சிபுரம் சரக டிஐஜியாக பதவி உயர்வு பெற்றுள்ளார். காஞ்சிபுரம் டிஐஜியாக இருந்த தேன்மொழி ஐஜியாக பதவி உயர்வு பெற்றதை அடுத்து அந்த இடத்தில் சாமுண்டீஸ்வரி நியமிக்கப்பட்டுள்ளார்.