தமிழகம்

தமிழகத்தில் 59 அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் குழாய் அமைக்க ரூ.72.28 கோடி நிதி ஒதுக்கீடு: அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தகவல்

செய்திப்பிரிவு

தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் கரோனா தொற்று தடுப்பு மற்றும் மேலாண்மை பணிகளை தமிழக அரசு தொடர்ந்துசிறப்பாக மேற்கொண்டு வருகிறது. உள்கட்டமைப்புகள், மனிதவளத்தை மேம்படுத்தும் பணிகளைசெய்கிறது.

இவைதவிர விலை மதிப்பற்றஉயிர்களை காக்கும் உயர்தர ஊசி மருந்துகளையும் வாங்கி மாவட்ட அளவில் இருப்பில் வைத்து கரோனா சிகிச்சை முறைகளை வலுவூட்டி வருகிறது.

இதன் ஓர் அங்கமாக ஆக்சிஜன் செல்லும் குழாய்களை பொதுப்பணித் துறையின் மூலம் அமைப்பதற்கு முதற்கட்டமாக ரூ.75.28 கோடி நிதி ஒதுக்கிமுதல்வர் பழனிசாமி உத்தரவிட்டார்.

இந்த நிதி ஒதுக்கீடு தமிழகத்தில் 59 அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் செல்லும் குழாய்கள் அமைக்கவும் மற்றும் சலவையகம், மத்திய கிருமி நீக்க மையம் ஆகியவற்றை வலுப்படுத்தவும் பயன்படுத்தப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT