ஜி.வி. கிருஷ்ணா ராவ் 
தமிழகம்

சென்னை சுங்கத் துறை தலைமை ஆணையர் பொறுப்பேற்பு

செய்திப்பிரிவு

சென்னை மண்டல சுங்கத் துறையின் தலைமை ஆணையராக ஜி.வி. கிருஷ்ணா ராவ் நேற்று பொறுப்பேற்றார்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கான ஜிஎஸ்டி மற்றும் கலால் துறை முதன்மை தலைமை ஆணையராக தற்போது பதவி வகித்து வரும் கிருஷ்ணா ராவ்,இப்பதவியை கூடுதலாக வகிப்பார்.

ஆந்திர பல்கலைக்கழகத்தில் அறிவியல் பாடப் பிரிவில் பட்டம் பெற்றுள்ள இவர், உஸ்மானியா பல்கலையில் எம்பிஏ மற்றும் எல்எல்பி பட்டம் பெற்றவர்.

சரக்கு மற்றும் சேவை வரியை (ஜிஎஸ்டி) வெற்றிகரமாக செயல்படுத்தியதில் கிருஷ்ணா ராவுக்கு முக்கியப் பங்கு உள்ளது.

சென்னை சுங்கத் துறை இணை ஆணையர் டி.சமய முரளிவெளியிட்டுள்ள செய்தியில் இத்தகவலை் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT