ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே கோனே ரிக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த கணேசன் மகன் பார்த் திபன் (31).
இவரது அண்ணன் வேலு (33) இவர்கள் இருவரும் தங்களது பூர்வீக வீட்டில் வசித்தனர். ஆனால், தான் மட்டுமே இங்கு வசிக்க வேண்டும் என தம்பியிடம் வேலு அடிக்கடி தகராறு செய்து வந்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பார்த் திபனை, வேலு கத்தியால் குத்தி னார். பலத்த காயமடைந்த பார்த்திபனை திருவாடானை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவர் உயிரிழந்தார்.
இதுகுறித்து பார்த்திபனின் மனைவி வினோதினி அளித்த புகாரின் பேரில் திருவாடானை போலீஸார் வழக்குப் பதிந்து தலைமறைவான வேலுவை தேடி வருகின்றனர்.