தமிழகம்

லடாக் எல்லை பிரச்சினையில் பதற்றத்தை தணிப்பது குறித்து இந்திய, சீன ராணுவ அதிகாரிகள் மீண்டும் பேச்சுவார்த்தை

செய்திப்பிரிவு

லடாக் எல்லைப் பிரச்சினை தொடர்பாக இந்திய, சீன ராணுவ உயர் அதிகாரிகள் நேற்று மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

கடந்த மாதம் 15-ம் தேதி கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் இந்திய, சீன ராணுவ வீரர்களிடையே மோதல் ஏற்பட்டது. இதில் கர்னல் சந்தோஷ் பாபு உட்பட 20 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர். சீன தரப்பில் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகின.

இதைத் தொடர்ந்து கடந்த மாதம் 22-ம் தேதி இரு நாடுகளின் ராணுவ உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, பதற்றத்தை தணித்து படைகளை வாபஸ் பெற சீனா ஒப்புக் கொண்டது. எனினும் இருதரப்பும் எல்லையில் படை களையும் ஆயுதங்களையும் குவித்து வைத்திருப்பதால் அப்பகுதியில் தொடர்ந்து பதற்ற நிலை நீடிக்கிறது.

இந்த பின்னணியில் இந்திய, சீன ராணுவ உயரதிகாரிகள் நேற்று மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினர். முந்தைய பேச்சுவார்த்தை, லடாக்கில் உள்ள சீன எல்லைப் பகுதியில் நடந்தது. இந்த முறை லடாக்கின் இந்திய எல்லைப் பகுதியில் உள்ள சுஷுல் பகுதியில் பேச்சுவார்த்தை நடந்தது.

இந்திய தரப்பில் 14-வது படைப்பிரிவு கமாண்டர் லெப்டினன்ட் ஜெனரல் ஹரிந்தர் சிங் தலைமையிலான குழுவினரும், சீன தரப்பில் திபெத் ராணுவ படைப்பிரிவு கமாண்டர் தலைமையிலான குழுவும் பங் கேற்றனர். எல்லையில் பதற்றத்தை தணிப்பது குறித்தும், படைகள் விலக்கலுக்கான வழிமுறைகளை இறுதி செய்வது குறித்தும் இருதரப்பினரும் ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது.

பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட முடிவு கள் குறித்து தகவல்கள் ஏதும் வெளி யிடப்படவில்லை.

இதற்கிடையே கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் டி-90 ரக பீஷ்மா பீரங்கிகளை இந்திய ராணுவம் நிறுத்தியுள்ளது.

இது போன்ற 6 பீரங்கிகள் அப் பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. - பிடிஐ

SCROLL FOR NEXT