கே.பி.அன்பழகன் 
தமிழகம்

அமைச்சருக்கு கே.பி.அன்பழகனுக்கு தொடர்ந்து சிகிச்சை

செய்திப்பிரிவு

உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு, கடந்த 13 நாட்களாக மியாட் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார்.

இந்நிலையில், நேற்று மியாட் மருத்துவமனை நிர்வாக இயக்குநர் மருத்துவர் பிரித்வி மோகன்தாஸ் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “2-வது பரிசோதனையிலும் அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது.

அவருக்கு லேசான இருமல் உள்ளது. அவரது உடல் நிலை சீராக இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT