தமிழகம்

காலாவதியான எல்ஐசி பாலிசிகளை மீ்ண்டும் புதுப்பிக்க 2 மாத சிறப்பு முகாம்

செய்திப்பிரிவு

எல்ஐசி நிறுவனம் தொடங்கப்பட்டு 59 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, செப்டம்பர் 1 முதல் 7-ம் தேதி வரை ஒருவார காலத் துக்கு இன்ஷூரன்ஸ் வாரம் கொண்டாடப்படுகிறது.

சென்னை அண்ணாசாலையில் உள்ள எல்ஐசி மண்டல அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், தென் மண்டல மேலாளர் டி.சித்தார்த்தன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

பின்னர் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி: இன்ஷூரன்ஸ் வாரத்தை முன்னிட்டு, ரத்ததான முகாம், மருத்துவ முகாம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற் பாடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த மாதம் எல்ஐசி அறிமுகப் படுத்திய புதிய எண்டோவ்மென்ட் பிளஸ் பாலிசியில் ஒரு மாதத்தில் 1,250 பாலிசிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம், ரூ.1.50 கோடி பிரீமியம் வசூல் ஆனது. மேலும், வரும் மாதங்களில் 5 புதிய பாலிசிகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. காலாவதியான பாலிசிகளை புதுப் பித்துக் கொள்ள சிறப்பு முகாம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த முகாம் இன்று (செப்டம்பர் 1-ம் தேதி) முதல் அக்டோபர் 31-ம் தேதி வரை நடைபெறும் என்றார்.

சிறப்பு சேவை மையம்

சென்னை அண்ணாசாலையில் உள்ள எல்ஐசி கட்டிடத்தில் சிறப்பு விரைவு சேவை மையம் தொடங் கப்பட்டுள்ளது. இங்கு பாலிசிதாரர் கள் பிரீமியம், பாலிசி தொடர்பான புகார்களுக்கு அணுகலாம்.

SCROLL FOR NEXT