தமிழகம்

கன்னியாகுமரி மாவட்டத்தில 24 மணி நேரத்தில் 32 பேர் கரோனாவால் பாதிப்பு: ஒருவர் மரணம்

எல்.மோகன்

கன்னியாகுமரி மாவட்டத்தில் சென்னை, மற்றும் வெளியூர்களில் இருந்து வருவோரால் கரோனா வேகமாகப் பரவி வருகிறது.

குறிப்பாக மாவட்டம் முழுவதும் அனைத்து தரப்பு மக்களையும் அச்சுறுத்தும் வகையில் நாகர்கோவில், கன்னியாகுமரி, தக்கலை மார்த்தாண்டம், வெள்ளமடம், தாழக்குடி, தூத்தூர், வள்ளவிளை, குலசேகரம், குருந்தன்கோடு, வாணியக்குடி, கருங்கல் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள கிராமங்களில் கரோனா தொற்றால் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதுனால் தொற்று ஏற்பட்டுள்ள கிராமங்களில் தொடர்பில் இருந்த மக்கள் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர்.

இது தவிர நாகர்கோவில், தக்கலை, குலசேகரம் பகுதிகளில் உள்ள தனியார் மருத்துவமனைகளிலும் நோயாளிகள், மருத்துவர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் நோயாளிகள், மருத்துவ பணியாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர்.

குமரி மாவட்டத்தில் 24 மணி நேரத்தில் மட்டும் 32 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கருங்கல் அருகே பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதுவரை மாவட்டம் முழுவதும் 452 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

4 பேர் மரணமடைந்துள்ளனர். வேகமாக பரவி வரும் கரோனாவால் குமரி மாவட்டத்தில் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்

SCROLL FOR NEXT