தமிழகம்

ஒப்பந்ததாரருக்கு கரோனா தொற்று: நாமக்கல் நகராட்சி அலுவலகத்துக்கு ‘சீல்’

செய்திப்பிரிவு

நகராட்சி ஒப்பந்ததாரருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து நாமக்கல் நகராட்சி அலுவலகம் மூடப்பட்டு நோய் தடுப்பு நடவடிக்கை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நாமக்கல் - திருச்செங்கோடு சாலையில் நகராட்சி அலுவலகம் அமைந்துள்ளது. நகராட்சி அலுவலகத்துக்கு வந்து செல்லும் ஒப்பந்ததாரர் உள்பட மூவருக்கு கரோனா தொற்றிருப்பது உறுதி செய்யப்பட்டது. மூவரும் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், நகராட்சி அலுவலகம் அருகே உள்ள வாரச்சந்தையைச் சேர்ந்த வியாபாரி உள்பட 3 பேருக்கு கரோனா தொற்றிருப்பது மருத்துவப் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே நகராட்சி அலுவலகம், வாரச்சந்தை வளாகத்திற்கு நகராட்சி ஆணையர் உத்தரவின்பேரில் சுகாதாரத் துறையினர் ‘சீல்’ வைத்து நோய் தடுப்பு நடவடிக்கையை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்

SCROLL FOR NEXT