தமிழகம்

சேலம் மாவட்டத்தில் 2-வது நாளாக மழை

செய்திப்பிரிவு

சேலம் மாவட்டத்தில் 2-வது நாளாக நேற்றும் பரவலாக மழை பெய்ததால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தென்மேற்குப் பருவமழை தொடங்கிய நிலையில், சேலம் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்தது. கோடை யில் போதுமான மழை இல்லாத தால், பயிர்களுக்கு போதிய நீரின்றி விவசாயம் பாதிக்கப் பட்டது. இதனால் விவசாயிகள் வேதனையில் இருந்தனர்.

இந்நிலையில், மாவட்டத்தின் பெரும்பாலான இடங்களில் நேற்று முன்தினம் மாலையில் மழை பெய்தது. தொடர்ந்து நேற்று மாலையும் பரவலாக மழை பெய்தது.

இதனால், வெயிலின் தாக்கம் குறைந்து, குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவியது. தொடர்ந்து இரண்டாவது நாளாக பெய்த மழையால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

SCROLL FOR NEXT