கடலூர் மாவட்டத்தில் நேற்று 42 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,045 ஆக உயர்ந்துள்ளது.
புதுச்சேரியில் நேற்று 42 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 690 ஆக உயர்ந்துள்ளது. திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 90 பேருக்கு நேற்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 636 ஆக உயர்ந்துள்ளது. திருச்சி அரசு மருத்துவமனை மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழக காஜாமலை வளாகத்தில் உள்ள கரோனா பாதுகாப்பு மையத்தில் சிகிச்சை பெற்று குணமடைந்த 57 பேர் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
2 பேர் உயிரிழப்பு: விழுப்புரம் முண்டியம்பாக்கம் மருத் துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா தொற்றுடன் சிகிச்சை பெற்று வந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் ஒருவர் நேற்று உயிரிழந்தார். மாவட்டத்தில் நேற்று 52 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேபோல, கரோனா தொற்றுடன் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்து வமனையில் சிகிச்சை பெற்று வந்த புன்னம்சத்திரத்தை சேர்ந்த 48 வயதான வியாபாரி நேற்று உயிரிழந்தார்.