கூடங்குளம் அணுமின்நிலைய முதல் அணு உலையில் பராமரிப்பு பணிகள் நிறைவடையும். இம்மாத இறுதிக்குள் பணிகள் நிறைவடைந்து மின் உற்பத்தி தொடங்கப்படும் என்று அணுமின்நிலைய வளாக இயக்குநர் ஆர்.எஸ்.சுந்தர் கூறினார்.
இது தொடர்பாக் நெல்லையில் ஆர்.எஸ்.சுந்தர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: ''கூடங்குளம் அணுமின்நிலைய முதல் அணு உலையில் பராமரிப்பு பணிகள் நிறைவடையும். இம்மாத இறுதிக்குள் பணிகள் நிறைவடைந்து மின் உற்பத்தி தொடங்கப்படும்.
இரண்டாம் அணு உலையில் மாதிரி எரிபொருட்கள் அகற்றும் பணி நடக்கிறது. 3 மற்றும் 4-வது அணு உலைக்கான கட்டமைப்பு பணிகள் 2016-ல் தொடங்கும்'' என்று ஆர்.எஸ். சுந்தர் பேசினார்.