தமிழகம்

மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் பழனிசாமி இன்று ஆலோசனை: ஊரடங்கு நீட்டிக்க வாய்ப்பு?

செய்திப்பிரிவு

தமிழக அரசால் அமைக்கப்பட்ட மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் பழனிசாமி இன்று ஆலோசனை நடத்துகிறார். ஊர டங்கை நீட்டிப்பது தொடர்பாக இதில் ஆலோசிக்கப்பட உள்ளது.

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க அமல் படுத்தப்பட்ட ஊரடங்கு நாளையுடன் (ஜூன் 30) முடிவடை கிறது. ஊரடங்கை நீட்டிப்பது குறித்து மத்திய அரசு அறிவிக் காத நிலையில், நோய்த் தொற்று பாதிப்பு குறைவாக உள்ள மேற்கு வங்கம், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்கள் ஜூலை 31 வரை ஊரடங்கை நீட்டிப்பதாக அறிவித்துவிட்டன. தமிழகத்தில், ஊர டங்கை நீட்டிப்பது தொடர்பாக மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசித்து முடிவெடுப்பதாக முதல்வர் தெரிவித்தார்.

அதன்படி, இன்று காலை 10 மணிக்கு சென்னையில் மருத் துவ நிபுணர்கள் குழுவுடன் முதல்வர் ஆலோசனை நடத்துகிறார். நாளுக்குநாள் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அதை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கை கள் குறித்தும், ஊரடங்கை நீட்டிப்பது குறித்தும் இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது.

மருத்துவ நிபுணர் குழுவின் பரிந்துரை, மத்திய உள்துறை மற்றும் சுகாதாரத் துறையின் பரிந்துரைகள், ஐசிஎம்ஆர்-ன் கருத்துகளை அறிந்து, அதன் அடிப்படையில் ஊடரங்கை எவ்வளவு நாட்களுக்கு நீட்டிப்பது என்பது குறித்து முதல்வர் இன்று அறிவிப்புகளை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஊரடங்கு கட்டுப்படுத்தாது

இதனிடையே சுகாதாரத் துறை உயர் அதிகாரிகள் சிலர் கூறும் போது, "ஊரடங்கால் தொற்று பரவலை கட்டுப்படுத்த முடியாது. இதனால் மக்கள்தான் பாதிக்கப்படுவார்கள். பரிசோதனைகளை அதிகரித்து, நோயாளிகளை கண்டறிந்து தனிமைப்படுத்த வேண்டும் என பலமுறை சொல்லிவிட்டோம். தற்போதுள்ள ஊரடங்கு அறிவிப்பதற்கு முன்பு நடந்த ஆலோசனையில் கூட ஊரடங்கு தேவையில்லை என்று தெரிவித்தோம். ஆனால், அரசியல் கட்சிகளின் அழுத்தம் காரணத் தால் ஊரடங்கு போடப்பட்டது. அமைச்சர்கள் சொல்வதை மட்டும் கேட்காமல் அதிகாரிகள் சொல்வதையும் கேட்டு முதல்வர் முடிவு எடுக்க வேண்டும்" என்று தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT