தமிழகம்

கரோனாவினால் உயிரிழந்த ஆய்வாளரின் குடும்பத்திற்கு  ரூ.2.35 லட்சம் நிதியுதவி 

கி.தனபாலன்

கரோனாவால் உயிரிழந்த மாம்பலம் காவல் ஆய்வாளரின் குடும்பத்திற்கு ராமநாதபுரம் மாவட்ட காவல்துறையினர் ரூ. 2,35,250 வழங்கினர்.

கரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்த சென்னை மாம்பலம் காவல் ஆய்வாளர் பால முரளி குடும்பத்தாருக்கு, ராமநாதபுரம் மாவட்ட காவல் அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் ரூ. 2,35,250 குடும்ப நல நிதியாக அளித்தனர்.

இந்நிதியை பார்த்திபனூர் சார்பு ஆய்வாளர் சாரதா தலைமையிலான போலீஸார் சென்னையில் உள்ள ஆய்வாளர் பால முரளியின் குடும்பத்தினரிடம் வழங்கி, ஆறுதல் கூறினர்.

SCROLL FOR NEXT