சாத்தான்குளம் போலீஸார் தாக்கி யதில் 10 நாட்களுக்கு முன் வேறு ஒரு இளைஞர் இறந்திருப்பதாக தகவல் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சாத்தான்குளம் போலீஸாரால் கைது செய்யப்பட்ட வியாபாரிகள் ஜெயராஜ், அவரது மகன் பென் னிக்ஸ் ஆகிய இருவரும் கோவில்பட்டி சிறையில் மர்ம மான முறையில் இறந்தனர்.
இந்நிலையில், சாத்தான்குளம் போலீஸ் நண்ர்கள் குழுவைச் சேர்ந்த 2 இளைஞர்கள் பேசும் உரையாடல் சமூக வலைதளங் களில் வேகமாகப் பரவி வருகிறது. அதில், சில தினங் களுக்கு முன் கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட பேய்க்குளத்தைச் சேர்ந்த 2 பேரை போலீஸார் கடுமையாக தாக்கியதாகவும், அதில் ஒருவர் இறந்து விட்டதாக அவர்கள் கூறுகின்றனர். இதுகுறித்து, சாத்தான்குளத்தைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞரும், காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினருமான ஆ.மகேந்திரன் கூறியதாவது:
இந்த ஆடியோ பதிவு உண்மையானது தான். ஒரு கொலை வழக்கு தொடர்பாக பேய்க்குளத்தை சேர்ந்த சுந்தரம் மகன் மகேந்திரன் (29) என்பவரை சாத்தான்குளம் போலீஸார் கடந்த 24.05.2020 அன்று விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். 25-ம் தேதி அவரை வீட்டுக்கு அனுப்பியுள்ளனர். இம்மாதம் 13-ம் தேதி மகேந்திரன் திடீரென இறந்துள்ளார். போலீஸார் தாக்கியதாலேயே அவர் இறந் துள்ளார். ஆனால், போலீ ஸாரின் மிரட்டல் காரணமாக மகேந்திரன் குடும்பத்தினர் புகார் செய்யவில் லை.
இதுபோல் இந்தக் கொலை வழக்கு தொடர்பாக கைது செய் யப்பட்டு, கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேய்க்குளத்தைச் சேர்ந்த ராஜா சிங் திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து விசாரிக்க உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என்று கூறினார்.