வேகத்தடைக்கு வண்ணம் பூசுவதற்காக நிதி திரட்டி நெடுஞ்சாலைத் துறைக்கு அளிக்க திருச்சி திருவானைக்காவலில் நேற்று பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர். 
தமிழகம்

வேகத்தடைக்கு வண்ணம் பூசுவதற்காக நெடுஞ்சாலைத் துறைக்கு நிதி அளிக்க திருச்சியில் பிச்சை எடுக்கும் போராட்டம்

செய்திப்பிரிவு

திருச்சி திருவானைக்காவலில் உள்ள ரயில்வே மேம்பாலத்துடன் சாலை இணையும் இடத்தில் வாகனங்களின் வேகத்தை குறைக்க வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், வேகத்தடையை அடையாளப்படுத்தும் வகையில் வெள்ளை வண்ணம் பூசப்படாததால் அடிக்கடி வாகனங் கள் விபத்துக்குள்ளாகின்றன.

இதுதொடர்பாக பல முறை நெடுஞ்சாலைத் துறை அதிகாரிக ளிடம் முறையிட்டும், நிதி இல்லை எனக் கூறி அவர்கள் அதை தட்டிக் கழித்து வந்துள்ளனர்.

எனவே வர்ணம் பூசுவதற்காக நிதி திரட்டி நெடுஞ்சாலைத்துறைக்கு அளிக்க, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் திருவானைக்காவல் நெடுஞ்சாலையில் நேற்று பிச்சை எடுக்கும் போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்துக்கு ஸ்ரீரங்கம் பகுதிச் செயலாளர் தர்மா தலைமை வகித்தார். மாவட்டப் பொருளாளர் ஜெயக்குமார் மற்றும் நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

தகவலறிந்து வந்த காவல் துறையினர் மற்றும் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை யில் ஈடுபட்டனர். இரு தினங்களில் வேகத்தடைக்கு வண்ணம் பூசப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டம் தற்காலிகமாக விலக்கிக் கொள்ளப்பட்டது.

SCROLL FOR NEXT