மதுரையில் கரோனா பாதிப்பால் 2 பெண்கள் உட்பட 8 பேர் மரணமடைந்துள்ளனர். 217 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னையைப் போன்று மதுரையிலும் நாளுக்கு, நாள் கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது.
கடந்த 10 நாளுக்கு மேலாக பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கைத் தொடர்ந்து கூடிக்கொண்டே செல்கிறது. இது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்துகிறது. மாவட்ட நிர்வாகமும் தீவிர தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
இருப்பினும், இன்று ஒரே நாளில் மட்டும் 217 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதுவரை மதுரை மாவட்டத்தில் கரோனாவால் 1387 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பாதிப்பை போன்று இறப்பு விகிதமும் தொடர்ந்து அதிகரிக்கிறது. 37, 38 வயது கொண்ட இரு பெண்கள், 63, 73 வயதுள்ள ஆண்கள் 26-ம் தேதியும், 73 வயது பெண் 17ம் தேதியிலும், 66, 64 வயது இரு ஆண்கள் 24-ம் தேதியிலும், 67 வயது கொண்ட ஆண் 25-ம் தேதியும் என, 8 பேர் பேர் மரணம் அடைந்துள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
மதுரையில் கரோனா பாதிப்பால் இதுவரை 20 பேர் வரை உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.