தமிழகம்

கோவில்பட்டி கிளைச் சிறையில் நீதித்துறை நடுவர், குற்றவியல் நீதிபதி ஆய்வு

எஸ்.கோமதி விநாயகம்

சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் உத்தரவின் பேரில் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி கிளைச் சிறையில் நீதித்துறை நடுவர் மற்றும் தூத்துக்குடி மாவட்ட தலைமை குற்றவியல் நடுவர்கள் இன்று நேரில் சென்று ஆய்வு நடத்தினர்.

கோவில்பட்டி கிளைச் சிறையில் சாத்தான்குளத்தை சேர்ந்த தந்தை, மகன் கடந்த 22, 23ம் தேதிகளில் அடுத்தடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தனர்.

இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து விசாரித்து வருகிறது.

இந்நிலையில், இருவர் இறந்த வழக்கு குறித்து கோவில்பட்டி நீதித்துறை நடுவர் மற்றும் மாவட்ட தலைமை குற்றவியல் நடுவர் ஆகியோர் கோவில்பட்டி கிளைச் சிறைச்சாலைக்குச் சென்று அங்குள்ள நிர்வாகப் பதிவேடுகள் மற்றும் மருத்துவப் பதிவேடுகள், சாத்தான்குளம் காவல் நிலையத்தில் உள்ள வழக்கு தொடர்பான ஆவணங்களையும், புகைப்படம் எடுக்கவும், வழக்கு தொடர்பான அனைத்து சிசிடிவி பதிவுகளை சேகரித்து பாதுகாப்பாக வைக்கவும், கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறைக் கைதி ராஜாசிங் தாக்கப்பட்டு மருத்துவமனையில் இருப்பது குறித்தும் விசாரித்து நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யவும் மதுரை உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.

இதையடுத்து, கோவில்பட்டி கிளைச் சிறைச்சாலையில் இன்று கோவில்பட்டி நீதிமன்ற நடுவர் பாரதிதாசன், மாவட்ட தலைமை குற்றவியல் நடுவர் ஹேமா ஆகியோர் சென்று சிறைக்கைதிகளிடம் விசாரணை நடத்தினர்.

மேலும், சிறையில் உள்ள ஆவணங்கள், கண்காணிப்பு கேமராவில் பதிவு செய்துள்ள காட்சிகள் ஆகியவற்றை பார்வையிட்டு சேகரித்தனர். இந்த விசாரணை காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை நடந்தது.

SCROLL FOR NEXT