தமிழகம்

கரோனா தானாக ஓடிவிடும்; பிரதமர், முதல்வர் சிறப்பாகப் பணியாற்றுகின்றனர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் பேட்டி

இ.மணிகண்டன்

தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களும் திறக்கப்பட வேண்டும் என்று ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஸ்ரீஸ்ரீ சடகோப ராமானுஜ ஜீயர் கோரிக்கை விடுத்துள்ளார்.

கரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களிலும் கோயில்கள், வழிபாட்டுத் தலங்கள் மூடப்பட்டுள்ளன. இருப்பினும் கர்நாடகா, டெல்லி, ஆந்திரா என சில மாநிலங்களில் வழிபாட்டுத்தலங்களுக்கு நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களும் திறக்கப்பட வேண்டும் என்று ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஸ்ரீஸ்ரீ சடகோப ராமானுஜ ஜீயர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, "கரோனா காலத்தில் பிரதமர் மோடி மற்றும் தமிழக முதல்வர் சிறப்பாகப் பணியாற்றி வருகின்றனர்.

இந்து சமய அறநிலையத்துறை தன் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும். தமிழக அரசு ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேரோட்டம் நடத்த ஏற்பாடு செய்யவேண்டும்.

தமிழகத்தில் தற்போது உள்ள நிலைமை ஏற்புடையதல்ல. தமிழகத்தில் அனைத்து கோயில்களும் திறக்கப்பட வேண்டும். அனைத்து கோயில்களும் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆண்டாள் கோயிலில் வழிபட இ-பாஸ் கொடுக்க வேண்டும். 108 முறை ஓம் நமோ நாராயணாய என்ற மந்திரத்தை மக்கள் வீட்டிலிருந்து ஜெபம் செய்தால் மருந்து, மாத்திரைகள் தேவையில்லை. கரோனா தானாக ஓடிவிடும்" என்றார்.

SCROLL FOR NEXT