தமிழகம்

இலங்கை கடற்படையால் பிடிக்கப்பட்ட 21 மீனவர்கள், 30 படகுகளை விடுவிக்க நடவடிக்கை: பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

இலங்கை கடற்படையால் பிடிக்கப்பட்ட 21 மீனவர் கள் மற்றும் 30 படகுகளை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று எழுதிய கடித விவரம்:

நாகப்பட்டினத்தில் 2 படகுகளில் 15 மீனவர் களும், புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினத் தில் இருந்து 2 படகுகளில் 6 மீனவர்களும் கடந்த 21-ம் தேதி மீன் பிடிக்கச் சென்றனர். அவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து, காங்கேசன் துறை சிறையில் அடைத்துள்ளனர்.

வாழ்வாதாரத்திற்காக மீன்பிடிக்கச் சென்ற அப்பாவி மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

இதனால் மீனவர்கள் குடும்பத்தினரின் அன்றாட வாழ்க்கை பாதிப்பிற்குள்ளாகியுள்ளது.

பாக்ஜலசந்தி பகுதியில் மீன்பிடிக்கும் உரிமைக்கு இலங்கை அரசு அடிக்கடி இடையூறு செய்து வருகிறது என்பதை நான் உங்களிடம் தொடர்ந்து தெரிவித்து வருகிறேன். கச்சத்தீவை தவறான ஒப்பந்தம் மூலம், மத்திய அரசு தாரை வார்த்து கொடுத்ததால்தான் இந்த விளைவு ஏற்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்கும் போது, அவர்கள் படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களை விடுவிக்காமல் இலங்கை அரசு பிடித்து வைத்துக் கொள்கிறது. இதனால் மீனவர்கள் மீன்பிடிக்க முடியாமல் வறுமைக்கு தள்ளப்படுகின்றனர். அந்த வகையில் 28 படகுகள் இலங்கையின் பிடியில் உள்ளன.

எனவே, நீங்கள் இந்த விவகாரத்தில் தலையிட்டு இலங்கை கடற்படையால் பிடித்துச் செல்லப்பட்ட 21 மீனவர்கள் மற்றும் அவர்களது 30 படகுகளையும் இலங்கை அரசு விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT