தமிழகம்

திருச்செங்கோட்டில் சிபிசிஐடி போலீஸார் 3-வது நாளாக விசாரணை: விஷ்ணுபிரியாவின் செல்போன், மடிக்கணினி சிபிசிஐடியிடம் ஒப்படைப்பு

செய்திப்பிரிவு

திருச்செங்கோடு பெண் டிஎஸ்பி தற்கொலை வழக்கு தொடர்பாக திருச்செங்கோடு முகாம் அலுவல கத்தில் நேற்று சிபிசிஐடி எஸ்பி நாகஜோதி தலைமையிலான அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, டிஎஸ்பி விஷ்ணுபிரியா பயன்படுத்திய 2 செல்போன், லேப்டாப், டேப் லெட் ஆகியவை சிபிசிஐடி போலீ ஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன.

நாமக்கல் மாவட்டம் திருச்செங் கோடு காவல் உட்கோட்ட டிஎஸ்பி யாக இருந்த விஷ்ணுபிரியா சென்ற 18-ம் தேதி அவரது முகாம் அலுவலகத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண் டார். பொறியியல் பட்டதாரி கோகுல் ராஜ் கொலை வழக்கின் விசாரணை அதிகாரியாக இருந்த நிலையில் அவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

காவல் துறை உயரதிகாரிகளின் நெருக்கடியால் அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் புகார் கூறப்படுகிறது. இதனால், அவரது தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பல்வேறு தரப்பி னரும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதற்கிடையே சம்பவம் நடந்த மறுநாளே டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கு சிபிசிஐடி போலீஸ் பிரிவுக்கு மாற் றப்பட்டது. அதேபோல் கோகுல் ராஜ் கொலை வழக்கும் சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றப்பட்டது.

இந்த இரு வழக்குகள் தொடர் பாக சிபிசிஐடி எஸ்பி நாகஜோதி தலைமையில் கோவை மண்டல கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின், சேலம் சரக சிபிசிஐடி டிஎஸ்பி ராஜன் ஆகியோர் கொண்ட அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் நாமக்கல் மாவட்ட காவல் கண் காணிப்பாளர் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஆர்.செந்தில்குமார், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சந்திர மோகன் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

ஆவணங்கள் ஒப்படைப்பு

இரு வழக்குகள் சம்பந் தப்பட்ட ஆவணங்கள் சிபிசிஐடி காவல் துறையினரிடம், நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மூலம் ஒப்படைக் கப்பட்டன. தவிர, டிஎஸ்பி விஷ்ணு பிரியா சம்பந்தப்பட்ட அனைத்து ஆவணங்களும் சிபிசிஐடியிடம் ஒப்படைக்கப்பட்டன.

இதையடுத்து 3-வது நாளான நேற்று திருச்செங்கோடு டிஎஸ்பி முகாம் அலுவலகத்தில் விசாரணை நடைபெற்றது. டிஎஸ்பியின் வாகன ஓட்டுநரான 2 காவலர்கள், பணிப் பெண் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அவரது அறையில் இருந்த 2 செல்போன், ஒரு லேப் டாப், டேப்லெட் உள்ளிட்டவையும் திருச்செங்கோடு காவல் துறை யினரிடம் இருந்து சிபிசிஐடி காவல் துறையினர் பெற்றுக் கொண்டனர்.

திருச்செங்கோடு ரூரல் காவல் நிலையத்தில் சிபிசிஐடி எஸ்பி நாகஜோதி 1 மணி நேரத்துக்கும் மேல் உள்ளூர் போலீஸாரிடம் விசாரணை நடத்தினார். அப்போது திருச்செங்கோடு காவல் உட் கோட்டத்துக்கு உட்பட்ட 9 காவல் நிலைய அதிகாரிகள், கோகுல் ராஜ் கொலை வழக்கு குறித்த தனிப்படை காவல் துறை யினரிடமும் விசாரணை நடத்தப் பட்டுள்ளது.

கோகுல்ராஜ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் அடையாளம் காணப்பட்ட மலைக்கோயில், பள்ளிபாளையம் ஆகிய இடங்களிலும் சிபிசிஐடி காவல் துறையினர் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். இதனி டையே டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கு சம்பந்தமாக விசாரணை நடத்த நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு சிபிசிஐடி ஐஜி மகேஷ்குமார் நேற்று காலை வருவதாக தகவல் வெளியானது. எனினும் மாலை 4 மணி வரை அவர் வரவில்லை.

இதற்கிடையில் சேலம் சரக காவல் துணைத் தலைவர் அலுவல கத்துக்கு நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஆர்.செந்தில்குமார் வரவழைக்கப்பட்டு, அங்கு வைத்து அவரிடம் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை நடத்தி யதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன

SCROLL FOR NEXT