மேட்டூர் அடுத்த கொளத்தூர் அருகே வனப்பகுதியில் உடல் மெலிந்து, எலும்பும் தோலுமாக மயங்கி கிடந்த யானை. 
தமிழகம்

வனத்தில் மயங்கி விழுந்த யானை

செய்திப்பிரிவு

சேலம் வனக்கோட்டம் மேட்டூர் வனச்சரகம் கொளத்தூர் அடுத்த நாயக்கன் தண்டா பகுதியில் யானை ஒன்று உடல் மெலிந்த நிலையில் மயங்கிக் கிடந்தது. தகவல் அறிந்த மேட்டூர் வனச்சரகர் பிரகாஷ் மற்றும் வனத்துறையினர் அங்கு சென்று யானைக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து, தருமபுரியைச் சேர்ந்த வனத்துறை கால்நடை மருத்துவர் பிரகாஷ் வரவழைக்கப்பட்டு, யானைக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டது. பரிசோதனையில், யானையின் குடலில் ஏற்பட்டுள்ள தொற்று காரணமாக, அது உணவு எடுத்துக் கொள்ளாமல் இருந்தது தெரியவந்தது.

இதனிடையே, மாவட்ட முதன்மை வனப் பாதுகாவலர் பெரியசாமி, சேலம் மாவட்ட வன அலுவலர் முருகன் ஆகியோரும் யானையை பார்வையிட்டனர். தொடர்ந்து யானைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

SCROLL FOR NEXT