எஸ்.ரத்தினவேலு 
தமிழகம்

‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் வழங்கும் ‘சிறு, குறு தொழிலை மீட்டெடுப்போம்’ இணைய வழி சந்திப்பு நாளை நடக்கிறது: தொழில் துறை வல்லுநர்கள் பங்கேற்பு

செய்திப்பிரிவு

கரோனா தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ள சிறு, குறு தொழில்களை மீட்டெடுக்கும் முயற்சியாக ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ், ‘சிறு, குறு தொழிலை மீட்டெடுப்போம்’ எனும் இணைய வழி சந்திப்பு நிகழ்ச்சியை நாளை நடத்துகிறது. இதில் தொழில் துறை வல்லுநர்கள் உரையாற்றுகின்றனர்.

கரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள், பள்ளி முதல்வர்கள், ஆசிரியர்களுக்காக ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் பல்வேறு செயல்பாடுகளை இணையம் வழியாக தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, கரோனா தாக்குதலால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள சிறு, குறு தொழில்களை மீட்டெடுக்கும் முயற்சியாக சிறு, குறு தொழில் செய்பவர்கள், வங்கியாளர்கள், சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவன (MSME) உறுப்பினர்கள், தொழில்முனைவோருக்கான இணைய வழி சந்திப்பை நடத்துகிறது. வரும் 27-ம் தேதி சனிக்கிழமை (நாளை) காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இதில் தமிழ்நாடு வர்த்தகசபையின் மூத்த தலைவர் எஸ்.ரத்தினவேலு, இருங்காட்டுக்கோட்டை சிப்காட் உற்பத்தியாளர்கள் அசோசியேஷன் செயலாளர் கே.பாலசுப்பிரமணியன், மதுரை நேட்டிவ்லீட் அமைப்பின் நிறுவனர், தலைமை செயல் அதிகாரி சிவராஜா ராமநாதன், சென்னை பாரத ஸ்டேட் வங்கியின் உதவி பொது மேலாளர் டி.ஆர்.சுப்பிரமணியன் ஆகியோர் உரையாட உள்ளனர்.

இதில் பங்கேற்க கட்டணம் எதுவும் கிடையாது. பங்கேற்க விரும்புவோர் https://connect.hindutamil.in/msme.php என்ற இணையதளத்தில் பதிவு செய்துகொள்ள வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு 8870260003, 9840961923 ஆகிய செல்போன் எண்களில் தொடர்புகொள்ளலாம்.

SCROLL FOR NEXT