தமிழகம்

செப். 2 வேலைநிறுத்தத்தை அரசு ஆதரிக்காதது ஏன்? - அமைச்சர் விளக்கம்

செய்திப்பிரிவு

சாலை போக்குவரத்து மசோதாவை எதிர்த்து செப்டம்பர் 2-ம் தேதி நடந்த போராட்டத்தை தமிழக அரசு ஆதரிக்காதது ஏன் என்பதற்கு தொழில்துறை அமைச்சர் பி.தங்கமணி விளக்கம் அளித்தார்.

சட்டப்பேரவையில் நேற்று தொழில் மற்றும் போக்குவரத்துத் துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தில் பேசிய திமுக உறுப்பினர் டி.செங்குட்டுவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர் அ.சவுந்தரராஜன் ஆகியோர், ‘‘மத்திய அரசின் சாலை போக்குவரத்து மசோதாவை எதிர்த்து செப்டம்பர் 2-ம் தேதி அகில இந்திய அளவில் போராட்டம் நடந்தது. இதற்கு மாநில அரசும் ஆதரவு அளித்திருக்க வேண்டும்’’ என்றனர்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் பி.தங்கமணி, ‘‘சாலை போக்குவரத்து மசோதாவை மாநில அரசும் எதிர்க்கிறது. ஆனால், செப்டம்பர் 2-ம் தேதி நடந்த போராட்டம், மத்திய அரசுடன் சேர்த்து மாநில அரசையும் எதிர்த்து நடத்தப்பட்டது. இதனால், மக்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகத்தான் அரசு ஆதரவு அளிக்கவில்லை’’ என்றார்.

SCROLL FOR NEXT