தமிழகம்

சென்னை விமான நிலையத்தில் 3.5 கிலோ தங்கம் பறிமுதல்

செய்திப்பிரிவு

சென்னை விமான நிலையத்தில் 3.5 கிலோ தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

அபுதாபியில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு நேற்று காலை 6 மணிக்கு ஒரு விமானம் வந்தது. அதில் வந்த கேரளாவை சேர்ந்த ரஹ்மான் (32) என்பவரின் சூட்கேசை சோதனை செய்த போது, அதில் 900 கிராம் தங்கக்கட்டிகள் இருந்தன. இதையடுத்து தங்கக் கட்டிகளை பறிமுதல் செய்த அதி காரிகள், இதேபோல நேற்று முன்தினம் நள்ளிரவில் கோலாலம் பூரில் இருந்து வந்த ராமன் (30) என்பவரை சுங்கத்துறை அதிகாரி கள் சோதனை செய்தனர். அவர் உள்ளாடையில் மறைத்து வைத் திருந்த 600 கிராம் தங்கக்கட்டிகளை பறிமுதல் செய்தனர்.

பாங்காக்கில் இருந்து நேற்று மாலை விமானத்தில் வந்த கர்நாடகாவைச் சேர்ந்த அப்பாஸ் என்பவரிடம் இருந்து 2 கிலோ தங்கக்கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

SCROLL FOR NEXT