தமிழகம்

பாஜக நிர்வாகிக்கு மிரட்டல்: மதுரை திமுக எம்எல்ஏ பி.மூர்த்தி மீது வழக்கு

என்.சன்னாசி

பாஜக நிர்வாகியை மிரட்டியதாக மதுரை திமுக எம்எல்ஏ. பி.மூர்த்தி உட்பட 5 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

மதுரை கிழக்கு தொகுதி திமுக எம்எல்ஏ பி.மூர்த்தி. இவருக்கு எதிராக சமீபத்தில் இணையதளங்களில் செய்தி ஒன்று வெளியானது. இது தொடர்பான தகவல்களை பாஜக இளைஞரணி மதுரை கோட்ட பொறுப்பாளரான ஊமச்சிகுளம் ஸ்ரீதேவி நகர் சங்கர் பாண்டி(30) தனது ஃபேஸ்புக், ட்விட்டரில் மறுபதிவு செய்தார்.

இது பற்றி தெரிந்து கொண்ட மூர்த்தி எம்எல்ஏ உள்ளிட்ட 5 பேர் ஜூன் 22-ம் தேதி சங்கர் பாண்டி வீட்டுக்குச் சென்றனர். தனக்கு எதிராக தகவல் பதிவிட்டது குறித்து மூர்த்தி எம்எல்ஏ கேட்டபோது, அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்நிலையில் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து தனக்கும், மனை விக்கும் கொலை மிரட்டல் விடுத்ததாக மூர்த்தி எம்எல்ஏ மீது மதுரை காவல் ஆணையர், காவல் கண்காணிப்பாளர் அலுவலகத் தில் சங்கர் பாண்டி புகார் அளித்தார்.

இப்புகாரின் அடிப்படையில் மதுரை ஊமச்சிகுளம் காவல் நிலைய எஸ்ஐ கருப்புச்சாமி , மூர்த்தி எம்எல்ஏ மற்றும் 5 பேர் மீது கொலை மிரட்டல் உள் ளிட்ட 3 பிரிவின் கீழ் வழக்குபதிவு செய்தனர்.

இதற்கிடையில், மதுரை ஊமச்சிகுளம் சந்திப்பு பகுதியில் மூர்த்தி எம்எல்ஏ மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும், தடை உத்தரவை மீறியும் ஆர்ப்பாட்டம் செய்த பாஜக புறநகர் மாவட்ட தலைவர் மகா சுசீந்திரன் உட்பட 84 பேரை போலீஸார் கைது செய்து, பின் விடுவித்தனர்.

இதைத்தொடர்ந்து, மூர்த்தி எம்எல்ஏ வை கைது செய்ய வலியுறுத்தி ஊமச்சிகுளத்தில் புறநகர் பாஜக தலைவர் சுசீந்திரன் தலைமையில் அக்கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடந்தது.

இந்நிலையில், பாஜக நிர்வாகியை மிரட்டியதாக மதுரை திமுக எம்எல்ஏ. பி.மூர்த்தி உட்பட 5 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

SCROLL FOR NEXT