சென்னையில் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதால், ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை 3,500 படுக்கைகளுடன் கரோனா மருத்துவமனையாக மாறுகிறது. தமிழக அரசு இதற்கான நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
கரோனா வைரஸ் பரவல் தமி ழகத்தை அச்சுறுத்தி வருகிறது . குறிப் பாக சென்னையில் வைரஸ் தொற்றின் பாதிப்பும் உயிரிழப்பும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. சென்னையில் கரோனா வைரஸ் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைகளில் 5 ஆயிரம் படுக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள் ளன. நந்தம்பாக்கம் வர்த்தக மையம், லயோலா கல்லூரி, குருநானக் கல்லூரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 17,500 படுக்கைகளுடன் கண் காணிப்பு மையங்கள் அமைக்கப்பட் டுள்ளன. கிண்டியில் உள்ள கிங் இன்ஸ் டிடியூட்டில் 500 படுக்கைகளுடன் சிகிச்சை மையம் இயங்கி வருகிறது.
இவைதவிர, துறைமுகம் பழைய மருத்துவமனை வளாகம் மற்றும் எழும்பூர் அரசு கண் மருத்துவமனை பழைய கட்டிடத்தில் படுக்கைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
வீடு வீடாக ஆய்வு, காய்ச்சலை கண்டறிவதற்கான சிறப்பு முகாம்கள் போன்றவற்றால் சென்னையில் தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருப் பது கண்டறியப்பட்டு வருகிறது.இதனால், அரசு மருத்துவமனைகள் மற்றும் கண்காணிப்பு மையங்களில் படுக்கைகள் நிரம்பி வழிகின்றன. புதிதாக வைரஸ் தொற்றால் பாதிக்கப் படுபவர் களுக்கு படுக்கைகள் இல்லாத தால், வீடுகளிலேயே தனிமைப்படுத் தப்படுகின்றனர்.
இதற்கிடையில், சென்னையில் வைரஸ் தொற்று இன்னும் ஓரிரு மாதங்களில் உச்சத்தைத் தொடும் என்றும், பாதிப்பு எண்ணிக்கை இப்போது இருப்பதைவிட பல மடங்கு அதிகரிக் கும் என்றும் மருத்துவ நிபுணர் கள் தெரிவித்துள்ளனர். அதனால், முன்னெச் சரிக்கை நடவடிக்கையாக சென்னை அரசு ராஜீவ் காந்தி பொது மருத்துவமனை முழுவதை யும் கரோனா வைரஸ் சிகிச்சை மருத்துவமனையாக மாற்ற தமிழக அரசு முடிவு செய் துள்ளது.
இதுதொடர்பாக சுகாதாரத் துறை அதிகாரிகள், மருத்துவர்கள் கூறிய தாவது:
கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் மட்டும் சென்னை அரசு பொது மருத்துவமனை யில் அனுமதிக்கப்படுகின்றனர். மற்றவர்கள் கண்காணிப்பு மையங்களுக்கு அனுப்பப்படுகின்றனர். தற்போது மருத்துவமனையில் வைரஸ் தொற் றுடன் 500-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னை யில் வைரஸ் தொற்றின் பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளதால், தற்போ துள்ள படுக்கைகள் போதுமானதாக இருக்காது. அதனால், இந்த மருத்துவ மனை முழுவதையுமே கரோனா வைரஸ் சிகிச்சைக்கு பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த மருத்துவமனையில் 3,500 படுக்கைகள் உள்ளன. தற்போது கரோனா வைரஸ் அச்சத்தால் புற நோயாளிகள் யாரும் மருத்துவ மனைக்கு வருவதில்லை. சிகிச்சையில் இருந்த நோயாளிகளும் வீடுகளுக்குச் சென்றுவிட்டனர். தற்போது சுமார் 200 பேர் மட்டுமே உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து போன்ற அவசர சிகிச்சைக்கு மட்டும் நோயாளிகள் அனுமதிக் கப்படுகின்றனர்.
அதனால், இந்த மருத்துவ மனையை கரோனா சிகிச்சை மைய மாக மாற்றும் பணிகள் தொடங்க வுள்ளன. இதன்மூலம் ஒரேஇடத்தில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 3,500 பேர் சிகிச்சை பெற முடியும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
இதனிடையே தமிழகத்தில் நேற்று மட்டும் 2,516 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 1,557 ஆண்கள், 959 பெண்கள் என மொத்தம் 2,516 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 2,478 பேர் ஏற்கெனவே பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள். இங்கிலாந்து, ரஷ்யா, காங்கோ, மாலத்தீவு, டெல்லி, குஜராத், மேற்கு வங்கம், கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, தெலங்கானா, ஆந்திராவில் இருந்து தமிழகம் வந்த 38 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக சென்னையில் 1,380 பேருக்கும் திருவள்ளூரில் 156 பேருக்கும் செங்கல்பட்டில் 146 பேருக்கும் மதுரையில் 137 பேருக்கும் திருவண்ணாமலையில் 114 பேருக்கும் வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரை, தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 64,603 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் 24,670 பேர் உட்பட தமிழகம் முழுவதும் இதுவரை 35,339 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் 1,227 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். தற்போதைய நிலை யில், சென்னையில் 18,889 பேர் உட்பட தமிழகம் முழுவதும் 28,428 பேர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று மட்டும் அரசு மருத்துவமனைகளில் முதியோர் உட்பட 28 பேரும் தனியார் மருத்துவ மனைகளில் 11 பேரும் உயிரிழந்தனர். இதன்மூலம் உயிரிழந்தவர்களின் எண் ணிக்கை 833 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 645 பேர் இறந்துள்ளனர்.
தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 44,205 பேரும் செங்கல் பட்டில் 4,030 பேரும் திருவள்ளூரில் 2,826 பேரும் திருவண்ணாமலையில் 1,313 பேரும் காஞ்சிபுரத்தில் 1,286 பேரும் வைரஸ் தொற்றால் பாதிக்கப் பட்டுள்ளனர் என்று சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
சித்த மருத்துவத்தால் குணமடைந்த 250 பேர்
வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அலோபதி முறையில் கூட்டுமருந்து சிகிச்சை, பிளாஸ்மா சிகிச்சை மற்றும் சித்த மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. சித்த மருத்துவர் வீரபாபு தமிழக அரசுடன் இணைந்து சென்னை விருகம்பாக்கத்தில் தனியார் கல்லூரி ஒன்றை கரோனா வைரஸ் சிகிச்சை மையமாக மாற்றியுள்ளார். இங்குள்ள வகுப்பறைகளில் 250 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு சித்த மருந்துகளான கபசுரக் குடிநீர், நிலவேம்பு கசாயம், மூலிகை தேநீர், தூதுவளை ரசம், கற்பூரவல்லி ரசம், ஆடாதொடை ரசம், மணத்தக்காளி ரசம், மூலிகை உணவுகள், நவதானிய பயறுகள் வழங்கி சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதன்மூலம் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் விரைவாக குணமடைந்து வருகின்றனர்.
இதுதொடர்பாக சித்த மருத்துவர் வீரபாபுவிடம் கேட்டபோது, “கரோனா வைரஸ் பாதிப்புக்கு ஏற்ப சிகிச்சை அளிக்கப்படுகிறது. காய்ச்சல், சளி, வாந்தி, பேதி, இருமல் போன்ற பிரச்சினைகள் இருந்தாலும் கசாயங்கள், மருந்துகள் கொடுக்கப்படுகிறது. இதுவரை, 250-க்கும் மேற்பட்டோர் கரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். தற்போது 210 பேர் சிகிச்சையில் உள்ளனர்” என்றார். இதன்மூலம் சித்த மருத்துவம் மூலமும் கரோனா பாதிப்பில் இருந்து நோயாளிகளை மீட்க முடியும் என்பதால் கணிசமான பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.