தமிழகம்

மதுரையில் ஒரே நாளில் 68 பேருக்கு கரோனா: 3 நாட்களில் 200-க்கும் மேற்பட்டோருக்கு தொற்று

என்.சன்னாசி

மதுரையில் இன்று ஒரே நாளில் 68 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே கரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கிறது.

கடந்த வாரங்களில் 10, 20 சதவீதம் என, இருந்த பாதிப்பு எண்ணிக்கை கடந்த ஓரிரு நாட்களாக 50 சதவீதமாக அதிகரித்துள்ளது.

மதுரையில் நேற்று ஒரே நாளில் 90 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டனர். தொடர்ந்து இன்று 68 நபர்கள் நோய் தொற்றுக்கு ஆளாகி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இவர்களுடன் சேர்த்து இதுவரை மாவட்ட அளவில் 705 பேர் தொற்று பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், சில நாளாகவோ பரிசோதனையின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் கூடுகிறது எனவும் சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மதுரையில் ஊரடங்கா?

மதுரையில் தொடர்ந்து சில நாட்களாக கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், மதுரையிலும் சென்னையைப் போல் ஊரடங்கு அமல்படுத்தயிருப்பதாக சமூக வலைதளங்களில் வேகமாக தகவல் பரவி வருகிறது. இந்நிலையில், இது குறித்து அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறும்போது, "மதுரை மாவட்டத்தில் நோய்த் தொற்று நிலைமை குறித்து தினமும் முதல்வர் தொடர்ந்து கேட்கிறார். நிலைமைக்கு ஏற்றவாறு ஊரடங்கு அமல்படுத்துவது பற்றி முதல்வர் தான் அறிவிப்பார்" என்றார்.

SCROLL FOR NEXT