விளை நிலத்தின் நடுவே கண்டு பிடிக்கபட்ட தானியக் குதிர். 
தமிழகம்

அவிநாசி அருகே விளைநிலத்தின் நடுவே தானியக் குதிர் கண்டுபிடிப்பு

செய்திப்பிரிவு

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகேயுள்ள கருவலூர் ராமநாதபுரத்தில் தொன்மையான தானியக் குதிர் கண்டறியப்பட்டுள்ளது.

ராமநாதபுரம்- கானூர் சாலையில், கருவலூர் கருணாகர வெங்கட்ரமணப் பெருமாள் கோயிலுக்கு சொந்தமான விவசாய நிலம் உள்ளது. இங்கு உழவுப் பணி மேற்கொண்டபோது, நிலத்தின் மையப் பகுதியில் பழமையான தானியக் குதிர் தென்பட்டுள்ளது. சுமார் 8 அடி உயரம், 5 அடி அகலம் கொண்ட தானியக் குதிர், முற்காலத்தில் தானியங்களை சேமித்து வைத்து, தேவையானபோது பயன்படுத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ளது.

தகவலறிந்து வந்த தொல்லியல் துறையினர், இந்த தானியக் குதிர் எந்த காலகட்டத்தைச் சேர்ந்தது என்பது தொடர்பாக ஆய்வு செய்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT