பேஸ்புக்கில் ஏற்பட்ட நட்பில், இளைஞருடன் சென்ற இளம் பெண்ணை வாணியம்பாடி போலீஸார் மீட்டனர்.
கர்நாடக மாநிலம் சிவாஜி நகர் பகுதியைச் சேர்ந்த 16 வயதான இளம் பெண், பெங்களூரில் உள்ள தனது தாத்தா, பாட்டி வீட்டில் வசித்து வருகிறார். கடந்த மாதம் வாணியம்பாடியில் உள்ள சின்ன பாட்டி வினோஜா வீட்டிற்கு அந்த பெண் வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த மாதம் 15-ம் தேதி அந்த பெண் வாணியம்பாடியிலிருந்து கடத்தி செல்லப்பட்டதாக வாணியம்பாடி தாலுகா காவல் நிலையத்தில் கடந்த மாதம் 26-ம் தேதி வினோஜா புகார் அளித்திருந்தார்.
இதே போன்று பெங்களுர் சிவாஜி நகர் போலீஸிலும் இளம் பெண்ணின் உறவினர்கள் புகார் அளித்திருந்தனர்.
கடத்தப்பட்ட இளம் பெண்ணை வாணியம்பாடி தாலுகா காவல் ஆய்வாளர் காமராஜ் மற்றும் போலீஸார் தீவிரமாக தேடிவந்த னர். இந்நிலையில், இளம் பெண் பெங்களூரில் இருப்பது போலீசாருக்கு தெரிய வந்தது.
உடனடியாக ஆய்வாளர் காமராஜ் மற்றும் போலீஸார் விரைந்து சென்று இளம் பெண்ணை மீட்டு, வாணியம்பாடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
முன்னதாக, இளம்பெண்ணிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் கூறியதாவது:
வாணியம்பாடியைச் சேர்ந்த ரூபேஷ் என்பவருடன் முகநூல் மூலம் அறிமுகமானேன். கடந்த மாதம் 15-ம் தேதி என்னை கோவாவில் உள்ள அவரது நண்பர் வீட்டிற்கு அழைத்து சென்றார். திருமணம் செய்து கொள்வதாக கூறி மோதிரம் அணிவித்து ஊட்டிக்கும் அழைத்துச் சென்றார். அதன்பின் என்னை விடுதியில் தங்க வைப்பதாக கூறிய அவர், தன் மனைவியிடம் விசயத்தை சொல்லிவிட்டு தனியாக வீடு எடுத்து தங்குவோம் என்று கூறினார். அவருக்கு ஏற்கெனவே திருமணம் ஆன விசயம் அப்போதுதான் எனக்கு தெரிந்தது. இதனால் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. என்னை பெங்களூர் பஸ் நிலை யம் பகுதியில் விட்டுவிட்டு சென் றார்.
இதன்பின்னர், நான் உறவி னர்களுக்கு தகவல் தெரிவித்தேன் என்று கூறியிருக்கிறார். நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இளம்பெண் பின்னர் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார்.