தமிழகம்

திண்டுக்கல் அருகே கோயில் நிர்வாகி குடும்பத்தை கட்டிப்போட்டு 150 பவுன் நகை, ரூ.35 லட்சம் கொள்ளை: 5 மணிநேரத்தில் குற்றவாளிகளை பிடித்த போலீஸார்

செய்திப்பிரிவு

திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு அருகே சுக்காம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் துரை ஆதித்தன். இவர் தனக்குச் சொந்தமான இடத்தில் சிவன் கோயில் கட்டி அதனை நிர்வாகம் செய்து வருகிறார். அருகிலேயே வீடு கட்டி மனைவி ரேவதி, மகன் மனோஜ், மகள் நித்தியா, மருமகன் ரமேஷ் ஆகியோருடன் வசித்து வருகிறார்.

நேற்று பிற்பகல் சுமார் 1 மணியளவில் காரில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் கத்தி, அரிவாள் போன்ற ஆயு தங்களைக் காட்டி மிரட்டி, வீட்டில் இருந்தவர்களை கயிற்றால் கட்டிப் போட்டுவிட்டு பீரோவில் இருந்த 150 பவுன் நகை மற்றும் ரூ.35 லட்சம் ரொக்கத்தை கொள்ளை யடித்து தப்பினர்.

கொள்ளையர்கள் சென்றதை உறுதிப்படுத்திய பின் கூச்சல் எழுப்பவே, அப்பகுதியில் இருந் தவர்கள் வந்து பார்த்து கட்டிப் போட்டிருந்த அனைவரையும் மீட்டனர். இந்த கொள்ளை சம்பவம் குறித்து வேடசந்தூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். திண்டுக்கல் எஸ்.பி., சக்திவேல் நேரில் சென்று விசாரணை நடத்தினார். கொள்ளைக் கும்பலைப் பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைக் கப்பட்டுள்ளன. பட்டப் பகலில் நடந்த இந்த துணிகரச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், கொள்ளை யர்கள் காரில் மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி வழியாக சென்ற தகவல் கிடைத்தது. இதை யடுத்து சிவகங்கை மாவட்ட எஸ்.பி., ரோகித்நாதன் வாகனச் சோதனையை தீவிரப்படுத்தினார். அப்போது வையாபுரிபட்டி வழியாக சந்தேகத்துக்கிடமாக சென்ற காரை போலீஸார் பின் தொடர்ந்தனர். புதுக்கோட்டை மாவட்டம் குமாரப்பட்டியில் காரை மறித்தனர். அதில் இருந்த 5 பேரை கைது செய்து 150 பவுன் நகை மற்றும் ரூ.15 லட்சத்தை கைப்பற்றினர்.

பிடிபட்டோர் வேடசந்தூர் டி.எஸ்.பி., இளவரசுவிடம் ஒப் படைக்கப்பட்டனர். கொள்ளை நடந்த 5 மணி நேரத்தில் குற்றவாளி களை பிடித்த போலீஸாரை உயர் அதிகாரிகள் பாராட்டினர்.

SCROLL FOR NEXT