திருச்சி அரசு மருத்துவமனை கரோனா வார்டில் கள்ளக் குறிச்சியில் பணியாற்றி வரும் மயக்கவியல் நிபுணர் ஒருவர் கரோனா தொற்றுடன் ஏற்கெனவே சிகிச்சையில் உள்ளார்.
இந்நிலையில், திருச்சி அரசு மருத்துவமனை நுண்கதிர் பிரிவில் பணியில் இருந்த மருத் துவருக்கும், பயிற்சி மருத்துவர் ஒருவருக்கும் கரோனா தொற்று இருப்பது நேற்று முன்தினம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, நுண் கதிர் சிகிச்சைப் பிரிவு சுத்தம் செய்யப்பட்டு, கிருமிநாசினி தெளிக்கப்பட்டு பூட்டப்பட்டுள்ளது. அந்தப் பிரிவில் பணியில் இருந்த அனைவரும் தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப் பட்டுள்ளனர்.
இதேபோல, திருச்சி மாநகர காவல் துணை ஆணையரின் கார் ஓட்டுநருக்கும் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
முன்னெச்சரிக்கை நடவடிக் கையாக காவல் துணை ஆணையர் மற்றும் சம்பந்தப்பட்ட காவலரு டன் தொடர்பில் இருந்த அனைவரையும் கரோனா பரிசோத னைக்கு உட்படுத்துமாறு சுகா தாரத் துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.
இவர்கள் உட்பட திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 75 பேர் மற்றும் சென்னை, அரியலூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை கரோனா வார்டில் மொத் தம் 85 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இறந்த முதியவருக்கு கரோனா?
இதனிடையே, திருச்சி மாவட் டம் புத்தாநத்தத்தைச் சேர்ந்தவ ரும் சென்னையில் ஜவுளிக்கடை நடத்தி வந்தவருமான 55 வயது முதியவர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குண மடைந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு கடுமையான மூச்சுத்திணறலால் திருச்சி தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் நேற்று அதிகாலை உயிரிழந்தார். அவரது உடல் பாலக்கரையில் உள்ள மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது. அவர் மீண்டும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. அவரது சளி மாதிரி பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.