தமிழகம்

தமிழகத்தில் வழக்கம் போல் 2 லட்சம் சரக்கு லாரிகள் ஓடும் லாரி உரிமையாளர்கள் அறிவிப்பு

செய்திப்பிரிவு

தமிழகத்தில் 2 லட்சம் சரக்கு லாரிகள் வழக்கம்போல் ஓடும் என லாரி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் எஸ்.யுவராஜ் கூறியதாவது:

தமிழகம் முழுவதும் தினமும் 4.5 லட்சம் லாரிகள் ஓடுகின்றன. இதில், சுமார் 1.5 லட்சம் லாரிகள்தேசிய அளவில் பர்மிட் பெறப்பட்டு இயக்கப்படுகின்றன. அத்தியாவசிய சரக்கு லாரிகளுக்கு எவ்விதத் தடையும் இல்லாததால், அரிசி, பருப்பு, காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களைக் கொண்டு செல்லும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட லாரிகள் தற்போது இயக்கப்படுகின்றன.

பாதிப்பு இருக்காது

மேலும், சென்னை உள்ளிட்ட4 மாவட்டங்களைத் தவிர, மற்றமாவட்டங்களில் விவசாயம்,கட்டுமானம், ஊரக தொழிற்சாலைகள் இயங்கும். முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள தொழிலாளர்கள் மூலம் கட்டுமான பணிகளை மேற்கொள்ள தடையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கான கட்டுமான பொருட்களை கொண்டு செல்லும் லாரிகளும் இயங்கும். எனவே, அத்தியாவசிய பொருட்கள் விநியோகத்தில் பாதிப்பு இல்லாமல் தினமும் 2 லட்சம் சரக்குலாரிகள் வழக்கம்போல் ஓடும்.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT