தமிழகம்

நெல்லையில் 600- ஐ நெருங்கும் கரோனா பாதிப்பு எண்ணிக்கை

அ.அருள்தாசன்

திருநெல்வேலி மாவட்டத்தில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 600-ஐ நெருங்கி வருகிறது.

கரோனா வைரஸ் தமிழகம் முழுவதும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. திருநெல்வேலி மாநகரில் 16 பேர், புறநகர்ப் பகுதிகளில் 14 பேர் என்று இன்று மட்டும் மொத்தம் 30 பேருக்கு நோய்த் தொற்று கண்டறியப்பட்டது. இதையடுத்து கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 582 ஆனது.

தற்போதைய நிலையில் ஓரிரு நாட்களில் பாதிப்பு 600-ஐக் கடக்கும் வாய்ப்புள்ளதாக மருத்துவத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. பாதிக்கப்பட்டவர்களில் 397 பேர் குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர்.

இதனிடையே மாநகரக் காவல்துறை சார்பில், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க எத்தகைய உணவுப் பொருட்களை உட்கொள்ள வேண்டும், குறிப்பாகத் திரவ உணவுகள், பழங்கள், மூலிகைகள் மற்றும் காய்கறிகளை உட்கொள்வது தொடர்பாக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வரையில் மாநகரில் பல்வேறு இடங்களில் காவல்துறை சார்பில் பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன.

பதாகை

SCROLL FOR NEXT