தமிழகம்

மீண்டும் பணி வழங்க வேண்டும்: மக்கள் நலப் பணியாளர்கள் உண்ணாவிரதம்

செய்திப்பிரிவு

உயர் நீதிமன்ற தீர்ப்பின்படி மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும். இதற்கான அறிவிப்பை சட்டப்பேரவையில் முதல்வர் அறிவிக்க வேண்டுமென தமிழ்நாடு மக்கள் நலப் பணியாளர்கள் முன்னேற்ற சங்கம் கோரியுள்ளது.

தமிழகத்தில் மக்கள் நலப் பணியாளர்கள் 13,000 பேரை, தமிழக அரசு பணி நீக்கம் செய்து உத்தரவிட்டது. அவர்களுக்கு பணி வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, உச்ச நீதிமன்றத்தின் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. பணி நீக்கத்தை எதிர்த்து தமிழ்நாடு மக்கள் நலப் பணியாளர்கள் முன்னேற்ற சங்கம் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது.

இந்நிலையில், மீண்டும் பணி வழங்க கோரி அண்ணாசாலையில் காயிதேமில்லத் கல்லூரி அருகே ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டத்தை நேற்று நடத்தினர்.

போராட்டத்தின்போது, தமிழ் நாடு மக்கள் நல பணியாளர்கள் முன்னேற்ற சங்கத்தின் மாநில தலை வர் தன.மதிவாணன் கூறியதாவது:

உச்ச நீதிமன்றத்தில் மேல்முறை யீட்டை திரும்பப்பெற்று உயர் நீதி மன்ற தீர்ப்பின்படி மக்கள் நல பணியாளர்களுக்கு உடனே பணி வழங்க வேண்டும், பணி நீக்கத்தால் தற்கொலை செய்து கொண்ட மக்கள் நலப்பணியாளர்கள் 200 பேரின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம்.

இந்த போராட்டத்தில் தமி ழகம் முழுவதும் பல்வேறு மாவட் டங்களில் இருந்து சுமார் 1000 பணியாளர்கள் வந்து கலந்து கொண்டுள்ளனர். அடுத்தகட்ட போராட்டங்கள் குறித்து எங்கள் சங்கத்தின் நிர்வாகிகள் கூடி விரை வில் அறிவிக்கவுள்ளோம் என்றார்.

SCROLL FOR NEXT