பிரதிநிதித்துவப் படம் 
தமிழகம்

திருச்சி மாநகர காவல் துணை ஆணையரின் கார் ஓட்டுநருக்கு கரோனா

அ.வேலுச்சாமி

திருச்சி மாநகர காவல் துணை ஆணையரின் கார் ஓட்டுநராகப் பணிபுரியும் காவலர் ஒருவருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருச்சி மாநகர காவல்துறையில் பணிபுரியும் துணை ஆணையரின் கார் ஓட்டுநரான காவலர் ஒருவர், கடந்த இரு நாட்களாக சளி, இருமலுடன் இருந்துள்ளார். எனவே, சந்தேகத்தின்பேரில் அவரைக் கரோனா பரிசோதனைக்கு உட்படுத்தினர். இந்நிலையில், அவருக்குக் கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது இன்று (ஜூன் 19) உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவரை உடனடியாக திருச்சி அரசு மருத்துவமனையின் கரோனா சிகிச்சைப் பிரிவில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல் துணை ஆணையர் மற்றும் சம்பந்தப்பட்ட காவலருடன் தொடர்பில் இருந்த நபர்கள் அனைவரையும் கரோனா பரிசோதனைக்கு உட்படுத்துமாறு சுகாதாரத்துறையினர் அறிவுரை வழங்கியுள்ளனர்.

காவலருக்குக் கரோனா தொற்று ஏற்பட்டது, திருச்சி மாநகர காவல்துறை வட்டாரத்தில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT