அனைத்துத் துறை வளர்ச்சிப் பணிகள் மற்றும் கரோனா வைரஸ் தடுப்பு பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் முன்னிலையில், கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் கே.ராதாகிருஷ்ணன் தலைமை யில் நடைபெற்றது.
செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறும்போது, “மாவட்ட எல்லைகளில் 42 இடங்களில் சோதனைச்சாவடி அமைத்து, வெளியூர்களில் இருந்து வருவோருக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்படுகிறது. திருப்பூர் நகரில் ஸ்மார்ட் சிட்டி பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
கரோனா பாதிப்பு சிகிச்சைக் காக, திருப்பூர் மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனை மற்றும் அரசு மருத்துவமனை களில் 1,850 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன.
நலவாரியத்தில் பதிவு செய்யப் பட்டு நிவாரணத் தொகை கிடைக் காதவர்களுக்கு, உடனடியாக நிவாரணத் தொகை வழங்க நட வடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
முன்னதாக, மன வளர்ச்சி குன்றிய மாற்றுத் திறனாளிகளின் பெற்றோருக்கு தையல் இயந்திரங்களை அமைச்சர் வழங்கினார்.